ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் நல சங்கம் (RAPRA) தொடங்கியுள்ள பிளஸ் டூவில் வணிகவியல், பொருளாதாரம் மற்றும் கணக்கியல் வகுப்புகளில் இலவசப் பயிற்சி பெற 28 பேர் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு இந்த வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்கள் இங்கு கற்பிக்கப்படும் பாடங்களில் சிறந்த மதிப்பெண் பெற்றதாக ராப்ரா கூறுகின்றது. பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு பயிற்சி வகுப்புகள் ஜூலை 2-ம் தேதி தொடங்கியது. காலை அமர்வில் வணிகவியல் மற்றும் கணக்கியல் பாடங்களில் பட்டய கணக்காளர் கிருஷ்ணப்ரியாவும், மதியம் அமர்வில் பட்டய கணக்காளர் அருண் அச்சுதன் பொருளாதாரம் மற்றும் வணிக கணிதம் ஆகிய பாடங்களிலும் வகுப்புகள் எடுக்கின்றனர்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. ராப்ரா மாணவர்களுக்கு இலவச மதிய உணவை வழங்கும். ஆர்வமுள்ளவர்கள் இப்போதே பதிவு செய்ய 9841030040 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
ராப்ரா மயிலாப்பூர்வாசிகள் இந்த தகவலை இங்கு பயன்பெறும் பெரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றது.