வார்டு 126ல் (மந்தைவெளி – மந்தைவெளிப்பாக்கம் – ஆர் ஏ புரம் மண்டலத்தின் ஒரு பகுதி) குடியிருப்பாளர்கள், இப்போது தங்களுக்கு இடையூராக உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, பல அரசு நிறுவனங்களின் அதிகாரிகளை நேருக்கு நேர் சந்தித்துப் பேசலாம்; மக்கள் குறைதீர் கூட்டம் இன்று (ஜனவரி 24ல்) நடக்கிறது.
தெற்கு கால்வாய்க்கரை சாலையில் உள்ள அல்போன்சா விளையாட்டு மைதானத்தில் உள்ள உள் கோர்ட்டில் அமைக்கப்பட்டுள்ள மேசைகளில் ஜி.சி.சி., போலீஸ், வருவாய், ஆதி திராவிட நலத்துறை, சமூக நலம், மின்விநியோகம் (TANGEDCO) மற்றும் பல துறைகளின் அதிகாரிகள் மக்களின் குறைகளை கேட்க அங்கு இருப்பார்கள் என வார்டு கவுன்சிலர் அமிர்த வர்ஷினி தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை அங்கு இருப்பர்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ‘மக்களுடன் முதல்வர்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.