மயிலாப்பூர் பகுதியில் சில பள்ளிகளில் 2024-2025ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் கீழே.
Updated on March 8:
மந்தைவெளி, ஜெத் நகரில் உள்ள ஸ்ரீ வேணுகோபால் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி முதல் 9 ஆம் வகுப்புகளுக்கும், 11 ஆம் வகுப்புக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 11 ஆம் வகுப்புக்கு தமிழ் மற்றும் பிரஞ்சு மொழிகள் வழங்கப்படுகின்றன. ஆர்வமுள்ள பெற்றோர்கள் விண்ணப்பப் படிவங்களை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பள்ளி அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, பள்ளியை 044-24957797 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரமத்தில் (CBSE), 10 மற்றும் 12 வகுப்புகளைத் தவிர அனைத்து வகுப்புகளுக்கும் சேர்க்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பெற்றோர் விண்ணப்பப் படிவத்தை பள்ளி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-24938040 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
டாக்டர் ஆர்.கே.சாலையில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் எப்பாஸ் மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பள்ளி அலுவலகத்தை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 044-42109529 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மயிலாப்பூரில் உள்ள கேசரி மேல்நிலைப் பள்ளியில் 1 முதல் 9 மற்றும் 11 வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை இம்மாதம் தொடங்குகிறது. மேலும் விவரங்களுக்கு 044-24980068 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Updated on March 2:
ராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இப்போது 6 முதல் 11ம் வகுப்புகளுக்கு சேர்க்கையை ஆரம்பித்துள்ளது. இந்த பள்ளியில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம். ஸ்மார்ட்போர்டுகள் பொருத்தப்பட்ட வகுப்பறைகள், பசுமையான சூழல் மற்றும் நல்ல விளையாட்டு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பப் படிவங்கள் பள்ளி அலுவலகத்தில் மதியம் 1.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை கிடைக்கும். தொலைபேசி எண் : 24937683
சர் சிவசாமி கலாலயா சீனியர் செகண்டரி பள்ளி, மயிலாப்பூர் – 10, 11 மற்றும் 12 வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்பிற்கான சேர்க்கை பொது தேர்வுகளுக்குப் பிறகு நடைபெறும். ஆர்வமுள்ள பெற்றோர் மேலும் விவரங்களுக்கு பள்ளி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 24641257. இந்த பள்ளி CBSE உடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஸ்மார்ட் போர்டுகள், ஸ்டெம் ரோபோட்டிக்ஸ் மற்றும் க்ரீச் வசதி போன்றவை உள்ளன.
வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் சேர்க்கை முடிவடைந்துவிட்டது.
பி.எஸ் சீனியர் செகண்டரி பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் சேர்க்கை முடிவடைந்துவிட்டது.
Updated on Feb 21:
எம்.சி.டி.எம் சிதம்பரம் செட்டியார் பள்ளி:
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் எம்.சி.டி.எம் சிதம்பரம் செட்டியார் பள்ளியில், எல்கேஜி முதல் ஒன்பதாம் வகுப்பு வரை சேர்க்கை நடைபெறுகிறது. பள்ளி லஸ் சர்ச் சாலையில் உள்ளது. மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள 9150076164 இந்த எண்ணை அழைக்கவும்.
செயின்ட் ஜோசப் ஆரம்பப் பள்ளி:
சாந்தோமில் உள்ள செயின்ட் ரபேல்ஸ் பெண்கள் மற்றும் ரோசரி மெட்ரிக் பெண்கள் பள்ளிகளை நடத்தும் FMM கன்னியாஸ்திரிகளால் நடத்தப்படும் செயின்ட் ஜோசப் ஆரம்பப் பள்ளியில், ஏப்ரல் 1 முதல், 1முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு, ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியத்தில் சேர்க்கை நடைபெறுகிறது.
மயிலாப்பூர் கிழக்கு மாட வீதியில் உள்ள சர் சிவசாமி கலாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி. 6 முதல் 9 வகுப்புகளுக்கும், 11 ஆம் வகுப்புக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 24957950 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.
செயின்ட் ரபேல்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் இங்கிலீஷ் மீடியம் வகுப்புகளுக்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
சாந்தோம் உயர்நிலைப்பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை சேர்வதற்கு விண்ணப்ப படிவங்கள் பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 24 வரை வழங்கப்படவுள்ளது. சேர்க்கைக்கு தேவையான ஆவணங்கள், மாற்றுச்சான்றிதழ், எமிஸ் எண், பிறப்பு சான்றிதழ். email:santhomeschoolds@gmail.com
டோம்னிக் சாவியோ மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஜூனியர் கின்டர்கார்டன் மற்றும் சீனியர் கிண்டர்கார்டன் மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. ஜூனியர் கின்டர்கார்டனில் சேர மாணவர்களின் வயது மே 31ம் தேதி மூன்றரை வயது முடிந்திருக்க வேண்டும். சீனியர் கிண்டர்கார்டன் 1முதல் 8 வகுப்பு வரை சேர மாணவர்கள் மே 31ம் தேதி முழுமையான வயதை எட்டியிருக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு பள்ளி அலுவலகத்தை தேவையான ஆவணங்களுடன் பள்ளி வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4மணி வரை தொடர்பு கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளவும். 24985396 / 24987100.
செய்தி: இலக்கியா பிரபு