Categories: சமூகம்

போதைக்கு அடிமையாகி சிக்கித் தவிக்கும் இளைஞர்களை மீட்க ஒரு சமூகம் ஒன்றாக இணைந்துள்ளனர்.

மயிலாப்பூர் வாரன் சாலையில் உள்ள விசாலாட்சி தோட்டத்தில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி குடிசை மாற்று வாரியத்தால் உருவாக்கப்பட்டது. கடந்த ஒரு வருடமாக இங்கு வசித்து வரும் சில இளைஞர்கள் வேலை இல்லாமல் இருந்துள்ளனர். இவர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் கல்லூரி மற்றும் பள்ளி படிப்பு படித்து வரும் இளைஞர்கள் சில பேர் ஆன்லைன் வகுப்புகளை சரிவர செய்யாமல் குடிப்பழக்கத்துக்கு ஆளாகியுள்ளதாக இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் கூறுகின்றனர். இவர்கள் இரவு நேரங்களில் மதுபாட்டில்கள் வாங்கி தெருமுனைகளில் மது அருந்துவதாகவும், இதை பார்த்து இன்னும் சிலரும் இந்த மது பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், சிலர் கஞ்சா பழக்கத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இது கவலை அளிக்கும் விதமாக உள்ளதாக இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் விசாலாட்சி தோட்டத்தில் உள்ள சமூக சேவை செய்யும் குழுவினர் அந்த பகுதியில் ஒரு கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்திற்கு மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, அவரும் கூட்டத்திற்கு வந்திருந்தார். இளைஞர்கள் இந்த பழக்கங்களிலிருந்து விடுபடுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு தாங்கள் ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மதுபாட்டில்களில் உள்ள மதுவை கீழே ஊற்றி உறுதிமொழி எடுத்தனர். மேலும் இளைஞர்களின் குடிப்பழக்கத்தையும் கஞ்சா பழக்கத்தையும் ஒழிக்க அதை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உள்ளூர் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.

admin

Recent Posts

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

22 hours ago

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான படிப்பு அரங்கம், குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…

22 hours ago

மெரினா கடற்கரையில் மாசி மகம் சடங்குகள்

மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…

22 hours ago

மயிலாப்பூர் தபால் நிலையத்தில் உள்ள ஏடிஎம் இப்போது 24 மணி நேரமும் செயல்படுகிறது.

தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…

2 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

5 days ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

6 days ago