மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று ஆகஸ்ட் 5ம் தேதி வியாழக்கிழமை மாலை தமிழில் அர்ச்சனை செய்யும் வசதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். மேலும் இது போன்று மாநிலம் முழுவதும் சுமார் நாற்பது பெரியகோவில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். இந்த தமிழில் அர்ச்சனை செய்யும் நிகழ்ச்சி ஏற்கெனவே இருந்த நடைமுறைதான், தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு இது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இந்த வார இறுதியிலிருந்து பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். தமிழில் அர்ச்சனை செய்பவர்களின் விவரங்கள் தகவல்பலகையில் வெளியிடப்பட்டுள்ளது என்றும், தேவைப்படுபவர்கள் அவர்களை தொடர்புகொண்டு தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…