கபாலீஸ்வரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் வசதி தொடக்கம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று ஆகஸ்ட் 5ம் தேதி வியாழக்கிழமை மாலை தமிழில் அர்ச்சனை செய்யும் வசதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். மேலும் இது போன்று மாநிலம் முழுவதும் சுமார் நாற்பது பெரியகோவில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். இந்த தமிழில் அர்ச்சனை செய்யும் நிகழ்ச்சி ஏற்கெனவே இருந்த நடைமுறைதான், தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு இது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இந்த வார இறுதியிலிருந்து பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். தமிழில் அர்ச்சனை செய்பவர்களின் விவரங்கள் தகவல்பலகையில் வெளியிடப்பட்டுள்ளது என்றும், தேவைப்படுபவர்கள் அவர்களை தொடர்புகொண்டு தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.