மயிலாப்பூர் இரயில் நிலையம் அருகே ஒருவர் படுகொலை

மயிலாப்பூர் திருமயிலை இரயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் தற்போது டாஸ்மாக் கடையை போலீசார் மூடியுள்ளனர். இது சம்பந்தமாக போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நபர் ஏற்கெனவே வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டு பெயிலில் வெளிவந்தவர் என்றும் இது இரு குழுவினர் சம்பந்தப்பட்ட கொலையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். மேலும் இந்த கொலை சம்பந்தமாக இருவரை கைது செய்துள்ளதாகவும் மூவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.