மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை மூடல்

இன்று காலை ஐந்து மணிமுதல் போலீசார் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையை மூடியுள்ளனர். இதற்கு முன் காலை நேரங்களில் ஆயிரக்கணக்கானோர் நடைபயிற்சி செய்ய பயன்படுத்தி வந்தனர். இந்த சாலை கூட்டமாக இருந்தது. அதே நேரத்தில் மக்களும் முகக்கவசம் அணியாமலும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை போலீசார் இந்த சாலையை தடுப்புகள் கொண்டு மூடியுள்ளனர்.