பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு ஆரம்பம்

தமிழகம் முழுவதும் இன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு (அரசால் ஏற்கெனவே வெளியிடப்பட்ட மதிப்பெண்களில் திருப்தி இல்லையென்றால் மீண்டும் தேர்வுகள் எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டது) இம்ப்ரூவ்மெண்ட் தேர்வுகள் தொடங்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் ஆர். கே மட சாலையில் உள்ள பி.எஸ் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 110 மாணவர்கள் இன்று மொழி பாடத்திற்க்கான தேர்வெழுதி வருகின்றனர். தனித்தேர்வர்களும் இவர்களுடன் தேர்வெழுதி வருகின்றனர். கோவிட்-19 தொற்று விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு தேர்வு நடந்துவருகிறது