லாசரஸ் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்

ஆர்.ஏ.புரத்தில் உள்ள லாசரஸ் தேவாலயத்தின் பள்ளி வளாகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. சில நாட்களுக்கு முன் இங்கு வந்திருந்த மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவிடம் தேவாலய நிர்வாகிகள் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி மூலம் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. இந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் இருநூறு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாகவும், மக்கள் அதிகளவு வரிசையில் வந்து இங்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதாக இங்குள்ள பாதிரியார் தெரிவித்துள்ளார்.

உங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால், சிறப்பு தடுப்பூசி முகாமை நடத்த மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவை தொடர்பு கொள்ளலாம். எம்.எல்.ஏ மாநகராட்சி மூலம் இந்த முகாமை நடத்த ஏற்பாடு செய்து கொடுப்பார்.

Verified by ExactMetrics