பிரபல சமூக சேவகரும், சமூகத் தலைவருமான மறைந்த சரோஜினி வரதப்பனின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா மார்ச் 12ஆம் தேதி இன்று மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியை மயிலாப்பூர் அகாடமி நடத்துகிறது.
ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜெகதீசன் தலைமை வகிக்க, ஜெயந்தி நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பத்ம பூஷண் விருது பெற்ற சரோஜினி வரதப்பன் குறித்து பத்மா வெங்கட்ராமன், பார்கவி தேவேந்திரன் ஆகியோர் பேச உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், சரோஜினி வரதப்பன் நூற்றாண்டு விருது பத்மா வெங்கட்ராமன் அவர்களுக்கு பெண்கள் நலனில் பங்களித்ததற்காக வழங்கப்படும். மற்ற விருதுகள் டாக்டர் லதா ராஜேந்திரன் (கல்வி சேவைக்காக) மற்றும் பாகீரதி ராமமூர்த்தி (முதியோர் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான சேவை) ஆகியோருக்கும் வழங்கப்பட உள்ளது.