மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ முண்டககன்னி அம்மன் கோயில் இன்று ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை பரபரப்பாக காணப்பட்டது.
கோவிலுக்கு வெளியே, பெண்கள் அமர்ந்து பாரம்பரிய முறையில் பொங்கல் சமைத்தனர்; பின்னர் அதை அம்மனுக்கு படையலிட்டு மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு சிறிது வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
கோவில் உள்ளே, சடங்குகள் நடந்தபோது பெண்கள் கூட்டம் குவிந்திருந்ததது.
மேலும், காலை வேளையில், சில பக்தர்கள் வீட்டில் செய்த கூழை கொண்டு வந்து பேப்பர் கப்பில் மக்களுடன் பகிர்ந்து, கீரை அல்லது உலர் மீன் உணவையும் வழங்கினர்.
<<எங்கள் சேனலில் கீழ்க்காணும் லிங்கில் சென்று மத நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்கலாம – www.youtube.com/mylaporetv >>