மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் தனது வருடாந்திர டிசம்பர் சீசன் இசை விழாவை இன்று மாலை தொடங்கியது – ஆனால் வேறு இடத்தில் – கீழ்ப்பாக்கத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையில் உள்ள ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் தொடங்கியது. இந்த புதிய இடமானது வைரஸ் தொற்று காலத்தின் விதிமுறைக்கு ஏற்ப திறந்த வெளி மைதானம். ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து ஒவ்வொரு நாளும் மாலையில், இசையை ரசிக்கலாம். ரசிகர்கள் தங்கள் கார்களில் உட்கார்ந்து கொண்டும் இசையை கேட்டு ரசிக்கலாம். இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். இந்த விழா டிசம்பர் 19 வரை நடைபெறுகிறது, இதில் T.M. கிருஷ்ணா, விஜய் சிவா, P.உன்னிகிருஷ்ணன், ராமகிருஷ்ண மூர்த்தி, காயத்ரி வெங்கடராகவன் மற்றும் விசாகா ஹரி போன்ற கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். தினசரி, ஒரே ஒரு கச்சேரி மட்டும் நடைபெறுகிறது. இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ரசிகரக்ள் வைரஸ் தொற்று நேர விதிகளை பின்பற்ற வேண்டும், மேலும் ரசிகர்கள் அனைவரும் முகமூடி அணிந்து வரவேண்டும்.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…