கிறிஸ்துமஸ் முதல் நாள் இரவு பேராலயங்களில் மிகவும் பிரமாண்டமாக பூசைகள் நடக்கும். ஆனால் இந்த வருடம் இந்த பூசைகள் கொரோனா விதிமுறைகளின் காரணமாக பேராலயங்களில் காலை நேரத்தில் நடத்தவிருக்கின்றனர். காலை 6 மணி முதல் 9 மணி வரை வெவ்வேறு நேரங்களில் நடத்துகின்றனர்.
சாந்தோம் பேராலயத்தில் இன்று மாலை 6.45 மணிக்கு ஆங்கிலத்தில் பூசைகள் நடக்கவுள்ளது. மேலும் தமிழில் பூசைகள் இரவு 11.30மணிக்கு நடைபெறவுள்ளது. வழக்கமாக தமிழ் பூசைகளில் கலந்து கொள்வதற்காக நகரில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கலந்துகொள்வார்கள். ஆனால் இந்த வருடம் உள்ளூரில் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் மட்டும் கலந்து கொள்ள அவர்களுக்கு பேராலய நிர்வாகம் டோக்கன் வழங்கியுள்ளது. எனவே இன்று இரவு நடக்கவிருக்கும் தமிழ் பூசையில் டோக்கன் வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நாளை பெரும்பாலான பேராலயங்களில் இரண்டு அல்லது மூன்று தமிழ் மற்றும் ஆங்கில பூசைகள் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…