ஃபிஷிங் மூலம் ஏமாற்றியதாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் குறைந்தது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஃபிஷிங் மூலம் பணத்தை இரண்டு மயிலாப்பூர்வாசிகள் இழந்துள்ளனர்.
இருவரின் கைபேசிகளிலும் ஒரு செய்தி வந்ததாகக் கூறப்படுகிறது – அவர்களின் பான் எண் இனி செல்லாது என்றும், அதைப் புதுப்பிக்க, அவர்கள் தங்கள் வங்கிக் கணக்கு எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
புகார்தாரர்கள் உடனடியாக வங்கி விவரங்களை சமர்ப்பித்தவுடன், சில நிமிடங்களில், ஒரு தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து எடுக்கப்பட்டதாக செய்தி வந்துள்ளது. அதன் பின்னரே அவர்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதேபோன்ற ஃபிஷிங் வழக்கு 24 மணி நேரத்திற்குள் நகரின் மற்றொரு பகுதியில் பதிவாகியுள்ளது.
எந்தவொரு ரகசியத் தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும், வங்கிகள் அல்லது காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது பிற நிதி அல்லது வணிகச் சேவைகள் என்று கூறும், எந்த செய்திகள் அல்லது அழைப்புகளுக்கும் பதிலளிக்க வேண்டாம், என்றும் காவல்துறை மக்களை எச்சரிக்கிறது.