லஸ்ஸில் சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட திட்டத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.
லஸ் வட்டத்தின் இருபுறமும் உள்ள இரண்டு பகுதிகளும், கச்சேரி சாலையில் ஒன்றும், ஸ்ரீ நவசக்தி விநாயகர் கோவிலை ஒட்டிய மற்றொன்றும் தடை செய்யப்பட்டுள்ளன.
லஸ் சர்ச் சாலை மற்றும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை சந்திப்பின் வடக்குப் பகுதியில், விவேக் கடைக்கு எதிரே உள்ள பரந்து விரிந்த நிலம் தற்போது தரிசாகக் கிடக்கிறது, இந்த ப்ளாட்டில் உள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டு வெற்று இடமாக காட்சியளிக்கிறது. (புகைப்படம் கீழே)
இது லஸ் மெட்ரோ நிலையத்தின் முக்கிய பணி மண்டலமாக இருக்கும். இங்கு கடந்த வாரம் பூமி பூஜை நடந்தது.
இது பரபரப்பான சந்திப்பு மற்றும் திட்டமும் சவாலானது என்பதால், பூமிக்கு அடியில் இரண்டு ரயில் பாதைகளுக்க்கான இரட்டை ரயில் நிலையங்களின் பணிகள் தாமதமாக மேற்கொள்ளப்படும் என்று சென்னை மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.