ஆர்.ஏ.புரத்தில் உள்ள பிராடீஸ் சாலையின் முடிவிலும், ஆர்.கே.மட சாலையின் முகத்துவாரத்திலும் உள்ள சென்னை மெட்ரோ பணித்தளம் சில வாரங்களாக தூசி மண்டலமாக மாறியுள்ளது. மேலும் தூசி மாசுபாட்டிலிருந்து வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை காப்பாற்ற மெட்ரோ அரை மனதுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஒவ்வொரு நாளும், இந்த தளத்தில் இருந்து மண் டஜன் கணக்கான லாரிகள் மூலம் எடுத்துச்செல்லப்படுகிறது.
இரவு நேரத்தில் இப்பணி நடந்தாலும், அப்பகுதி முழுவதும், ரோடு/தெருக்கள் தூசி நிறைந்து காணப்படுகிறது.
பீக் ஹவர்ஸின் போது ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல், சுற்றிலும் தூசிகளை உருவாக்குகிறது, என்று வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்புவதற்கு இந்த வழியை பயன்படுத்தும் இரண்டு வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
சென்னை மெட்ரோ ரயிலின் ஒப்பந்ததாரர்கள் சுவர் ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும் தேங்கி இருக்கும் தூசி அடுக்குகளை அகற்றுவதை கண்டுகொள்வதில்லை.