சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாவது திட்டத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை இயக்க திட்டம் தீட்டப்பட்டிருந்தது. கடந்த மூன்று வருடங்களாக இந்த வழி தடத்தை செயல்படுத்த ஆய்வு பணிகள் மேற்கொண்டபோது கச்சேரி ரோடு, லஸ் சர்ச் ரோடு, ஆழ்வார்பேட்டை போன்ற பகுதிகளில் பூமிக்கு அடியில் வழித்தடங்கள் சென்றாலும் தனியாருக்கு சொந்தமான நிறைய இடங்கள் அடிபடுவதாக செய்திகள் வந்தது. பின்னர் மக்கள் நிறைய கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தினர். ஆனால் தற்போது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் சிறியதாக சில மாற்றங்கள் செய்துள்ளதாகவும், இதனால் மிகவும் குறைந்த அளவே தனியார் இடங்கள் இந்த திட்டத்தில் அடிபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மெட்ரோ இரயில் வேலைகளை அரசுக்கு சொந்தமான இடங்களில் செய்யவிருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இந்த செய்தி இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வரவேற்க கூடியதாக உள்ளது. அதே நேரத்தில் இன்னும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்திடமிருந்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்த திட்டத்தை தற்போது செயல்படுத்த தொடங்கினால் கச்சேரி சாலை மற்றும் லஸ் போன்ற பகுதிகளில் வாகனப்போக்குவரத்து தடைபடும். மற்றும் இந்த பகுதிகளில் கடைகள் வைத்திருப்போர் ஏற்கனெவே கொரோனாவினால் வியாபாரம் இல்லாமல் இருக்கின்றனர். இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது மேலும் வியாபாரம் பாதிக்கப்படும்.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…