ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயிலில் மே 12, திங்கட்கிழமை காலை நடந்த சித்ரா பௌர்ணமி கொண்டாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள், பெரும்பாலும் பெண்கள் பங்கேற்றனர்.
கோயிலில் 1008 பால்குடங்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன, பதிவு செய்த அனைவரும், ஒவ்வொரு பால்குடங்களையும் எடுத்துக்கொண்டு, கோயிலில் தொடங்கி, அதைச் சுற்றியுள்ள நான்கு வீதிகள் வழியாகச் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர்.
பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
செய்தி: மதன் குமார்
Watch video of this event: