மயிலாப்பூர் டாக்டர் ரங்கா சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை டிசம்பர் 14 ம் தேதி காலை கார்ப்பரேஷனின் ஒப்பந்த ஊழியர்கள் மீண்டும் மழை நீர் செல்லும் வடிகால் வாய்க்கால்களை சுத்தம் செய்தனர். மழை நேரத்தில் அடித்து வந்த குப்பைகள் அனைத்தையும் சுத்தம் செய்தனர்.
மழை நேரங்களில் ரங்கா சாலையில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது. அதேபோல் வாரன் சாலை மற்றும் ரங்கா ரோடு சந்திப்பில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு வாரங்களுக்கு முன் மழை நீர் தேங்காமல் இருக்க புதிய குழாய்களை பதித்துள்ளனர். இதன்காரணமாக இந்த பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பகுதி வாரியாக தெருக்களில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் குடியிருப்புகளில் உள்ள அசோசியேஷன் தலைவர்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து செயல்பட்டால் தெருக்களில் மழை நீர் தேங்கி வெள்ளம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்கே நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புகளின் அசோசியேஷன் தலைவர் பாலசுந்தரம் அந்த பகுதியில் வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில் மாநகராட்சியின் உள்ளூர் செயற்பொறியாளர் ஒருவரை அழைத்து பிரச்சனையை தீவிரமாக கண்டறிந்து சரிசெய்ததாக கூறுகிறார். எனவே அந்தந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளின் அசோசியேஷன் தலைவர்கள் மாநகராட்சி ஊழியர்களுடன் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் மழையால் ஏற்படும் பிரச்சனைகளை விரைவாக தீர்க்கலாம் என்று கூறுகிறார்.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…