மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள பிரபலம் வாய்ந்த காது கேளாதோர் மற்றும் கண் பார்வையற்றோருக்கான கிளார்க் பள்ளியின் பொன்விழா கடந்த ஆண்டு ஏப்ரலில் கொண்டாட திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் விழா தள்ளிவைக்கப்பட்டது. மீண்டும் இந்த வருடம் விழாவை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போதும் சூழ்நிலை சரியில்லாததால் மீண்டும் விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவிற்க்காக பள்ளி நிர்வாகம் சில திட்டங்கள் வகுத்திருந்தனர். பள்ளியிலுள்ள ஆடியோலஜி ஆய்வகத்தை மேம்படுத்துதல் மற்றும் பொன்விழா நிகழ்ச்சியில் குழந்தைகளின் இசை மற்றும் நடன திறன்களை வெளிப்படுத்தும் ஒரு பெரிய கலாச்சார நிகழ்ச்சி நடத்துதல், மேலும் இந்த பள்ளியில் படித்து வாழ்க்கையில் ஒரு பெரிய அடையாளத்தை உருவாக்கிய அனைத்து பழைய மாணவர்களையும் மேடையில் கொண்டு வந்து உரை நிகழ்த்துதல் போன்ற திட்டங்களை வகுத்திருந்தனர்.
இதற்கிடையில், ஆசிரியர்கள் சுமார் 25 பேர், ஆன்லைன் வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மாணவர்கள் பெரும்பாலும் காதுகேளாதவர்கள் மற்றும் கண் பார்வை இல்லாதோர் என்பதால் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது மிகவும் சிரமம். கடந்த ஒரு வருடமாக மாணவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு இப்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. கடந்த ஆண்டு சுமார் 120 மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இது தவிர கிளார்க் பள்ளி தற்போது தங்களுடைய இரண்டாவது பயிற்சி பள்ளியை கேளம்பாக்கத்தில் நிறுவியுள்ளது.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…