ஆழ்வார்பேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சி நடத்தும் சமுதாய நல கல்லூரியில் திறன் சார்ந்த குறுகிய கால சான்றிதழ் படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகள் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படுகிறது.
இந்த கல்லூரியில் இந்த வருடம் புதிய மாணவர் சேர்க்கை நர்சிங் படிப்புகள், ஸ்போக்கன் இங்க்லிஷ், அடிப்படை கணினி கல்வி போன்ற பிரிவுகளில் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த படிப்புகளை சென்னை மாநகராட்சியும் ரோட்டரி கிளப்பும் சேர்ந்து நடத்துகிறது. இது தவிர சில தனியார் அமைப்புகளும் இந்த படிப்புகளுக்கு உதவி வருகிறது.
இந்த கல்லூரி ஆழ்வார்பேட்டை மேம்பாலம் முனையிலுள்ள வின்னர்ஸ் பேக்கரியின் பின்புறத்தில் உள்ளது. நீங்கள் இந்த கல்லூரியில் படிக்க விரும்பினால் நேரடியாக கல்லூரியை தொடர்புகொள்ளலாம். தற்போது கூட சில படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…