கொரோனா தொற்று இப்போது மறுபடியும் வேகமாக பரவி வருவதால் அரசு சில விதிமுறைகளை கண்டிப்பாக பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க ஆணையிட்டுள்ளது. கோவில்கள், மசூதிகள் மற்றும் பேராலயங்களில் இரவு எட்டு மணிக்கு மேல் எவ்வித நிகழ்வுகளும் நடத்த கூடாது. இது தவிர வேறு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏற்கனெவே தொடங்கி நடைபெற்றுவருகிறது. இப்போது அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப விழாவில் மாற்றங்களை செய்துள்ளனர். சனிக்கிழமை மாலை நடைபெற வேண்டிய கருட சேவை இப்போது வெள்ளிக்கிழமை மாலையே நடைபெறவுள்ளது. இதற்குப்பின் பிரம்மோற்சவ விழாவின் அனைத்து ஊர்வலமும் கோவிலுக்கு உள்ளேயே நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்று தேவாலயங்களிலும் இரவு எட்டுமணிக்கு மேல் எவ்வித பிரார்த்தனை கூட்டங்களும் நடத்தப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லஸ் அருகே உள்ள தேவாலயத்தில்
ஞாயிற்றுக்கிழமை அனைத்து பூசைகளும் இரவு ஏழு மணிக்குள்ளேயே முடிக்கப்படும் என்றும், ஏழு மணிக்கு மேல் மக்கள் வெளியில் எங்கும் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவர் என்று பாதிரியார் பீட்டர் தூமா தெரிவிக்கிறார்.
இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தேவாலயங்களில் நடைபெறும் பூசைகளுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை. ஆனால் கோவில்களில் பூசைகள் செய்வதில் சில பாதிப்புகள் உள்ளது.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…