மயிலாப்பூரில் நேற்று வியாழக்கிழமை கொரோனா தடுப்பூசி போடும் மையங்களை நாம் பார்வையிட்டோம்.
சி.பி.இராமசாமி சாலையிலுள்ள சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் மற்றும் ஆந்திர மகிள சபாவில் தடுப்பூசி வழங்கும் இடத்தையும் பார்வையிட்டு விசாரித்த போது, இந்த இரண்டு இடங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள், வாக்குப்பதிவு நாளை தவிர மற்ற நாட்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் கூட்டம் அதிகளவு வந்ததாக தெரிவித்தனர். ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 150 நபர்கள் வருவதாகவும், சில நாட்களில் 200 நபர்கள் கூட தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவதாகவும் தெரிவிக்கின்றனர். சாந்தோம் ஆரம்ப சுகாதார மையத்தில் ஒரு நாளைக்கு ஐம்பது நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த முடியும் என்றும், ஆனால் இங்கேயும் அதிகமாக மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தடுப்பூசி போதுமான அளவு இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ஏதாவது ஒருநாள் மக்கள் குறைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தால் அன்று மீதமுள்ள தடுப்பூசிகளை அருகிலுள்ள சுகாதார நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு எடுத்து சென்று பயன்படுத்தப்படும். ஆகவே தடுப்பூசி எங்கேயும் எப்போதும் வீணாவதில்லை என்று தெரிவிக்கின்றனர். நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பினால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையங்களுக்கு காலை 9.30 மணியளவில் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…