ஆர்.ஏ.புரத்தின் முக்கிய சாலையில் ஆபத்தான பகுதி

நீங்கள் அடிக்கடி சி.பி.ராமசாமி சாலையைப் பயன்படுத்தினால், இந்த சாலையில் ஆபத்தான இடத்தை பார்க்கலாம்.

ஆர்.ஏ.புரத்தில் பில்ரோத் மருத்துவமனையை ஒட்டிய சாலையின் ஒரு பகுதி மோசமான நிலையில் உள்ளது; சாலையின் இந்தப் பகுதியின் இரண்டு அல்லது மூன்று அடுக்குகள் சேதமாகி உள்ளது.

இங்கு இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ‘ஆபத்து’ எச்சரிக்கும் வகையில், ஓரிரு டிராபிக் மார்க்கர்கள் வைக்கப்பட்டுள்ளன.

சாலையின் இந்தப் பகுதி தண்ணீர் தேங்கும் பகுதியாகும்; கனமழை பெய்யும் போது, ​​தண்ணீர் தேங்கி நிற்பதால், இந்த சாலைப் பகுதி சீரழிவதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.

Verified by ExactMetrics