இந்திய விமானப்படையின் ஏர் ஷோவை பார்க்க ஏற்ற இடம் எது தெரியுமா?

air force air show at marina அக்டோபர் 6-ம் தேதி மெரினாவுக்கு மேல் வானில் விமானப்படையின் கண்காட்சி நடைபெறவுள்ளது, அக்டோபர் 2ம் தேதி இதற்காக நடைபெற்ற விமானிகளின் ஒத்திகையை பெருவாரியான மக்கள் கண்டு ரசித்தனர். அக்டோபர் 6 காலை 11 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறது.

அக்டோபர் 2, விடுமுறை நாளானதால், ஸ்பைடர் ஜெட்ஸ் மற்றும் போர் விமானங்களின் ஒத்திகையை பார்க்க, கடற்கரையில் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர்.

அக்டோபர் 6ம் தேதி நடைபெறவுள்ள விமானப்படையின் சாகசங்களை பார்க்க ஏற்ற இடம் விவேகானந்தர் இல்லத்திற்கு எதிரே உள்ள கடற்கரைதான்.

மக்கள் வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும், பொது போக்குவரத்தை பயன்படுத்தவும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

Verified by ExactMetrics