சென்னை கார்ப்பரேஷனுக்கு சொந்தமான லஸ் அவென்யூவில் புதிய நிலத்தில் ஜவஹர் பால் பவன் வளாகத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
லஸ்ஸில் சென்னை கார்ப்பரேஷனுக்கு சொந்தமான இடத்தில் ஜவஹர் பால் பவன் இப்போது இயங்கிவருகிறது.
இந்த பால் பவன் குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு பாட்டு பாடுதல், நாட்டுப்புற நடனம் மற்றும் பாட்டு, ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் போன்ற கலைகளை கற்றுக்கொடுக்கிறது. இதில் ஐந்து முதல் பதினாறு வயதுடைய மாணவர்கள் சேரலாம். கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மத்திய அரசின் திட்டங்களிலும், போட்டிகளிலும் பங்குபெறலாம். அவ்வாறு பங்கு பெற்று அவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழுக்கு அனைத்து துறைகளிலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
கடந்த நான்கு வருங்களாக இந்த பால் பவனுக்கு சரியான கட்டிட வசதி இல்லாததால் சுறுசுறுப்பாக இயங்கவில்லை. சமீபத்தில் தமிழக முதலமைச்சரால் இந்த திட்டம் முறையாக தொடங்கப்பட்டது. ரூ.2 கோடிக்கு மேலான தொகை இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வளாகம் லஸ்ஸில் உள்ள சென்னை கார்ப்பரேஷனுக்கு சொந்தமான இடத்தில் பதினாறு வகுப்பறைகள், ஒரு அரங்கம் மற்றும் ஒரு நூலகத்துடன் இரண்டு மாடியில் அமையவுள்ளது. ஒரு வருட காலத்தில் இந்த பணிகள் அனைத்தும் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…