லஸ்ஸில் ஜவஹர் பால் பவனுக்கான புதிய வளாகம்.

சென்னை கார்ப்பரேஷனுக்கு சொந்தமான லஸ் அவென்யூவில் புதிய நிலத்தில் ஜவஹர் பால் பவன் வளாகத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

லஸ்ஸில் சென்னை கார்ப்பரேஷனுக்கு சொந்தமான இடத்தில் ஜவஹர் பால் பவன் இப்போது இயங்கிவருகிறது.

இந்த பால் பவன் குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு பாட்டு பாடுதல், நாட்டுப்புற நடனம் மற்றும் பாட்டு, ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல் போன்ற கலைகளை கற்றுக்கொடுக்கிறது. இதில் ஐந்து முதல் பதினாறு வயதுடைய மாணவர்கள் சேரலாம். கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மத்திய அரசின் திட்டங்களிலும், போட்டிகளிலும் பங்குபெறலாம். அவ்வாறு பங்கு பெற்று அவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழுக்கு அனைத்து துறைகளிலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

கடந்த நான்கு வருங்களாக இந்த பால் பவனுக்கு சரியான கட்டிட வசதி இல்லாததால் சுறுசுறுப்பாக இயங்கவில்லை.  சமீபத்தில் தமிழக முதலமைச்சரால் இந்த திட்டம் முறையாக தொடங்கப்பட்டது. ரூ.2 கோடிக்கு மேலான தொகை இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வளாகம் லஸ்ஸில் உள்ள சென்னை கார்ப்பரேஷனுக்கு சொந்தமான இடத்தில் பதினாறு வகுப்பறைகள், ஒரு அரங்கம் மற்றும் ஒரு நூலகத்துடன் இரண்டு மாடியில் அமையவுள்ளது. ஒரு வருட காலத்தில் இந்த பணிகள் அனைத்தும் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Verified by ExactMetrics