சென்னை கார்ப்பரேஷன், ஆழ்வார்பேட்டை மேம்பாலம் அருகே வின்னர்ஸ் பேக்கரி பின்புறத்தில் கம்யூனிட்டி கல்லூரியை (சமுதாய கல்லூரி) பல வருடங்களாக நடத்தி வருகின்றனர். இந்த கல்லூரியில் குறுகிய காலத்தில் வேலைவாய்ப்புகளை பெரும் வகையில் பல்வேறு படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியை செவ்வாய்க்கிழமை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டார். இந்த கல்லூரியில் பேக்கரி சம்பந்தமான படிப்புகள் பிரபலம். மேலும் இது தவிர பாரா மெடிக்கல் அசிஸ்டன்ட், ஸ்போக்கன் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகின்றனர்.
நகரிலிருந்தும் வெளியூர்களிலிருந்து நிறைய பேர் வந்து இங்கு பயின்றுவருகின்றனர். மேலும் பேக்கரி சம்பந்தமான படிப்புக்கு உதவித்தொகையும் வழங்குகின்றனர். இந்த திட்டம் சென்னை மாநகராட்சி, ரோட்டரி கிளப் மற்றும் ஹாட் பிரட்ஸ் மஹாதேவன் நிறுவனத்துடன் இணைந்து இந்த கல்லூரியை நடத்தி வருகின்றனர்.
நீங்கள் இங்கு பேக்கரி மற்றும் இதர படிப்புகளில் சேர விரும்பினால் கல்லூரியை தொடர்பு கொள்ளவும்.
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…