மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. இங்கு நவம்பர்16-ஆம் தேதி சடங்குகள் தொடங்குகின்றன.
சிறப்பு நிகழ்வின் சில முக்கிய நிகழ்வுகள் இங்கே –
நவம்பர் 16 : 7 am – 12 pm- பேயாழ்வார் அவதாரத் தலத்தில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல் , யாகசாலை நிர்ணயம்
நவம்பர் 20 – காலை 5 மணி – 5.30 மணி – மஹாபூர்ணாஹுதி
– காலை 6 மணி முதல் 7.30 மணி வரை – மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்)
காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை – தீர்த்த பிரசாத வினியோகம், சர்வ தரிசனம்.
இரவு 7 மணி – ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.
இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக தீவிர சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த வாரம், ஓவிய கலைஞர்கள் கோயில் மற்றும் அதன் புராணக்கதைகளை கருப்பொருளாகக் கொண்ட அழகான ஓவியங்களை சுவர் சுற்றிலும் மற்றும் கூரையின் மீதும் ஒரு ஆர்ட் கேலரியை உருவாக்கியுள்ளனர்.
குளத்தில் உள்ள மண்டபமும் நன்றாக வர்ணம் பூசப்பட்டுள்ளது.