சென்னை மாநகராட்சியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட கோவிட் தொழிலாளர்கள், ஏப்ரல் 2020 முதல், சுமார் 17 மாதங்களுக்கு மேலாக ஆர்.ஏ.புரத்தின் அனைத்து பகுதிகளிலும் சேவை செய்த பிறகு ஆகஸ்ட் மாத கடைசி நாளில் விடைபெற்றனர்.
காமராஜ் சாலையின் கடைசி முனையில் உள்ள சென்னை மாநகராட்சியின் தர்மாம்பாள் பூங்காவில் இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு விழா எடுக்கப்பட்டது. கேக்குகள் வெட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்த பூங்காவில்தான் இந்த தொழிலாளர்களுக்கு கோவிட் நேரத்தில் ஒவ்வொரு நாளும் பயிற்சிகள் மற்றும் பணிகள் சம்பந்தமாக கூட்டங்கள் நடைபெறும்.
“இது ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பம், ஆனால் நம்மில் பலர் வேறு வேலை நியமனம் பெறுவது பற்றி யோசித்தோம்” என்று பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு மூத்த கோவிட் தொழிலாளி தீபா கூறினார்.
கோவிட் நேரத்தில் வருமானமில்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த எங்களுக்கு வழங்கப்பட்ட இந்த பணி மிகவும் பயனுள்ளதாக இருந்தது, என்று HR படித்த தீபா கூறினார். மேலும் அடுத்து வரும் காலங்களில் சில NGOs அல்லது கார்ப்பரேஷன் எங்களுக்கு மேலும் பணிகள் வழங்கிடும் என்று நம்புவதாக தீபா கூறுகிறார்.
ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் 20/30 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் மயிலாப்பூர் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்டனர்,
கோவிட் நேரத்தில் சிலருக்கு சவாலான வேலைகள் வழங்கப்பட்டது, இந்த பணி சிலருக்கு சமூகத்திடையே நல்லுறவை ஏற்படுத்தியது, தடுப்பூசி போட சொன்னதால் சிலர் மக்களால் விரட்டப்பட்டனர். இந்த கடினமான சூழ்நிலையில் சிலர் திறமையாக வேலைசெய்தனர்.
2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கொரோனா தொற்று மோசமாக தாக்கிய கேவிபி கார்டன்ஸ் போன்ற பகுதிகளில் பணிபுரிந்தவர்கள், ஆர் ஏ புரத்தின் மிகவும் நெரிசல் மிகுந்த பகுதியில் பணிபுரிந்தவர்கள் தொற்று பாதித்து பெரும் சவால்களை எதிர்கொண்டனர்.
ஒரு கட்டத்தில், தொழிலாளர்கள் குழு 175 க்கும் மேல் இருந்தது. அவர்களுக்கு குடியிருப்பாளர்கள், என்ஜிஓக்கள் மற்றும் மயிலாப்பூர் எம்எல்ஏ ஆகியோர்ஒரு கப் தேநீர் அல்லது காலை உணவை வழங்கினர். சமீபத்திய வாரங்களில், சென்னை மாநகராட்சி கோவிட் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 30 ஆக குறைத்தது.
தொற்றுநோய் வேகமாக பரவி வந்த போது இந்த தொழிலாளர்களுடன் நீங்கள் தொடர்பு கொண்டு உதவி செய்தீர்களா? உங்கள் அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்!
மயிலாப்பூரில் நவம்பர் 20ம் தேதி காலையில் ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கான முதல் சடங்கு தொடங்கியது. தெருக்கள்…
சென்னை மாநகராட்சி மெரினா லூப் சாலையின் தெற்குப் பகுதியில் மீன் சந்தை மற்றும் உணவு விடுதிக்கான திட்டங்களைக் கொண்டுள்ளது. இத்திட்டம்…
ஆழ்வார்பேட்டை முர்ரேஸ் கேட் சாலையில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் திங்கள்கிழமை மாதிரி…
சித்திரகுளம் வடக்கு வீதி இப்போது சுத்தமாக காட்சியளிக்கிறது. சென்னை மாநகராட்சி உள்ளூர் பொறியாளர் தலைமையில் துப்புரவுப் பணி நடந்தது. இது…
ஆர் ஏ புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபா வளாகத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் இலவச பல் பரிசோதனை…
மயிலாப்பூர் மண்டலத்தில் மழை பெய்யும் போது நின்று உற்று நோக்கும் நல்ல இடங்களில் ஒன்று இப்பகுதியில் உள்ள கோவில் குளங்கள்.…