சில மாதங்களாக மெரினா கடற்கரையை சிறப்பாக எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றி சென்னை உயர்நீதி மன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாநகராட்சியிடம் கருத்துக்களை கேட்டு வருகின்றனர். நீதிபதிகள் இந்த வழக்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த இந்த வழக்கில் முதலாவதாக மெரினாவை குப்பைகளின்றி எவ்வாறு அழகாக நிர்வகிப்பது, இரண்டாவது கடற்கரை பகுதிகளில் வியாபாரம் செய்துவரும் கடைகளுக்கு உரிமம் வழங்கி எவ்வாறு ஒழுங்குபடுத்துவது, மூன்றவதாக மெரினா லூப் சாலையில் (கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை) உள்ள மீன் வியாபாரம் செய்பவர்களுக்கு புதியதாக மீன் அங்காடி அமைத்து அங்காடியில் மட்டும் மீன் வியாபாரம் செய்ய அனுமதிப்பது, கடைசியாக பட்டினப்பாக்கம் முதல் பெசன்ட்நகர் வரை புதிய லிங்க் சாலை (அடையாறு ஆற்றின் மேலே புதியதாக ஒரு பாலம்) அமைப்பது தொடர்பாகவும் விவாதம் நடைபெற்று வந்தது.
தற்போது வரை இந்த வழக்கு சென்னை மாநகராட்சி மெரினாவில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரே மாதிரியான வகையில் தள்ளுவண்டிகள், மற்றும் உரிமம் வழங்குவது மற்றும் அடையாறு ஆற்றின் மேலே புதியதாக பாலம் அமைப்பது, இதற்கு சென்னை மாநகராட்சி இரண்டு திட்டங்களை வகுத்துள்ளனர். முதல் திட்டம் – இந்த பாலத்தில் சைக்கிள், கார், வேண் போன்ற வாகனங்களை அனுமதித்தல் இதன் செலவு மதிப்பு சுமார் 410 கோடி ரூபாய் – இரண்டாவது திட்டம், மக்கள் பாலத்தில் நடந்து மற்றும் சைக்கிளில் செல்லும் வகையில் சிறியதாக பாலம் அமைத்தல் இதற்கு ஆகும் செலவு சுமார் 230 கோடி ரூபாய் ஆகும் என்று நீதிபதிகளிடம் விளக்கம் அளித்தனர். ஆனால் நீதிபதிகள் சிறிய பாலம் அமைப்பது தேவையில்லை என்றும், அதே நேரத்தில் அடையாறு ஆற்றின் மேலே பெரிய பாலம் அமைத்தால், ஆர்.ஏ. புரத்தில் மற்றும் தற்போதுள்ள அடையாறு பாலத்தில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…