மந்தைவெளி தபால் நிலையம் தற்போது மீண்டும் பிஸியானது.

ஆர்.கே. மட சாலை மந்தைவெளி தெரு சந்திப்பில் உள்ள மந்தைவெளி துணை தபால் நிலையத்தில் ஊரடங்கு நேரத்தில் குறைந்தளவு ஊழியர்களை வைத்து சேவைகளை வழங்கி வந்தனர். தற்போது இந்த துணை தபால் நிலையம் ரொம்ப பிஸியாக இயங்கி வருவதாக போஸ்ட் மாஸ்டர் சத்யபாமா தெரிவித்துள்ளார். மேலும் தற்போது ஒரு மாதத்தில் தபால் நிலையத்தில் சுமார் முந்நூறு சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்றும் ஊரடங்கு நேரத்தில் தபால் சேவைகள் கூட சுமார் நாற்பது சதவீதம் அளவுக்கு சரிந்தது என்றும் தற்போது மீண்டும் பிஸியாக இயங்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கிறார். ஆனால் ஊரடங்கு நேரத்தில் மருந்து பார்சல்கள் அதிகம் வந்தது. தற்போது மக்கள் இந்த தபால் நிலையத்திற்கு தங்களுடைய அக்கௌன்ட் சேவைகளை புதுப்பிக்கவும் மற்ற வேலைகளுக்காகவும் வரத்தொடங்கியுள்ளதால் தற்போது மீண்டும் பிஸியாக இயங்க தொடங்கியுள்ளது.

இந்த தபால் நிலையத்திற்கு நவம்பர் 2020ல் புதியகட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வேலை நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மட்டுமே அனைத்து சேவைகளும் கிடைக்கும். மாலை 5.30 வரை திறந்திருந்தாலும் இந்த நேரத்தில் ஸ்டாம்ப் மட்டுமே விற்கப்படும்.

admin

Recent Posts

‘இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்’ – ஒரு காவல்துறை அதிகாரியின் உரை. மார்ச் 21ல்

'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…

1 hour ago

நந்தலாலா மருத்துவ அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம். மார்ச் 22.

நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…

23 hours ago

உள்ளூர் தபால் நிலையங்களில் ஸ்பீட் போஸ்ட் (Speed ​​Post) வழங்கும் புதிய சேவைகள். முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்தில் விநியோகம்.

ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…

2 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலய மகா சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…

3 days ago

2026 தேர்தல்: பொது இடங்களில் உள்ள அரசு சார்ந்த விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை மறைக்கும் பணியாளர்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…

4 days ago

தொல்காப்பியப் பூங்காவின் முகத்துவாரப் பகுதி வற்றி வருகிறதா?

தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…

5 days ago