மயிலாப்பூரில் உள்ள இரண்டு சபாக்கள் கடந்த வாரம் தங்களுடைய வருடாந்திர மார்கழி இசை விழாவை தொடங்கியுள்ளனர். முதலாவதாக கடந்த வெள்ளிக்கிழமை மயிலாப்பூர் கிழக்கு மாட வீதியிலுள்ள பாரதிய வித்யா பவன் இசை விழாவை தொடங்கினர். இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பாரதிய வித்யா பவனின் இசை விழாவில் பத்து நாட்களுக்கு தினமும் மாலை 5 மணிக்கும் 6.30 மணிக்கும் இரண்டு கச்சேரிகள் நடைபெறும். பிரபலம் வாய்ந்த கர்நாடக இசைக்கலைஞர்களின் கச்சேரிகள் நடைபெறவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கூடுதலாக காலை பத்துமணிக்கு கச்சேரி நடைபெறவுள்ளது. இந்த கச்சேரிகளில் பங்கேற்க அனுமதி இலவசம். கச்சேரிகளை காண வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். அதே நேரத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
கடந்த சனிக்கிழமை மயிலாப்பூரிலுள்ள கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் சபா அவர்களின் வருடாந்திர இசை விழாவை தொடங்கினர். ஆனால் இந்த விழா தி.நகரிலுள்ள வாணி மஹாலில் நடைபெற்றது. இந்த விழாவில் நான்கு மூத்த இசை கலைஞர்களுக்கு சுதாராணி ரகுபதி (பரதநாட்டிய குரு), எஸ்.சுந்தர்(மூத்த வாய்ப்பட்டு கலைஞர்), சாக்யசேணி சாட்டர்ஜி (பரதநாட்டிய கலைஞர்), சந்தீப் நாராயணன் (வாய்ப்பட்டு கலைஞர்) இவர்கள் தவிர ஆர்.ஆர். சபாவின் செயலாளர் ஆர்.நாகராஜனுக்கும் விருது வழங்கப்பட்டது.
ஆனால் இந்த வருடம் கூட கடந்த வருடம் போன்று கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் தங்களுடைய இசை விழா கச்சேரிகளை ஆன்லைனில் வெளியிடுகின்றனர். இந்த கச்சேரிகள் சபா உறுப்பினர்களுக்கு இலவசம். மேலும் கச்சேரிகளை ஆன்லைனில் காண விருப்பமுள்ளவர்கள் கட்டணம் செலுத்தி கச்சேரிகளை காண வேண்டும். இந்த ஆன்லைன் கச்சேரிகள் அனைத்தும் டிசம்பர் 1ம் தேதி முதல் வெளியிடப்படவுள்ளது.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…