மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தின் மேற்குப் பகுதியில் வேலி உள்ள இடம் ஆண்களால் திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாக மாறி உள்ளது.
நாள் முழுவதும் மற்றும் அந்தி சாயலுக்குப் பிறகும், ஆண்கள் வேலிக்கு எதிராகவும், அடிக்கடி குளம் உள்ள பகுதியிலும் சிறுநீர் கழிக்கின்றனர்.
பேருந்து நிற்கும் இந்த இடம் பிஸியாக இருப்பதால், பேருந்துக்காக நிறைய பேர் காத்திருக்கின்றனர், சிறுநீரின் துர்நாற்றம் இங்கு பேருந்திற்காக நிற்பவர்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும் அளவிற்கு உள்ளது.
சென்னை மாநகராட்சியின் உள்ளூர் பணியாளர்கள் தற்போது, இந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், இது கோவில் உள்ள பகுதி எனவே இங்கு சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று, எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஒரு பதாகையை வைத்துள்ளனர்.
செய்தி, புகைப்படம்: பாஸ்கர் சேஷாத்ரி