தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோயில்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளும் தொடுதிரை வசதியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில், இந்த கோயில் மற்றும் தமிழ்நாட்டின் பிற பிரபலமான கோயில்கள் பற்றிய முக்கிய தகவல்களை மக்களுக்கு வழங்க தொடுதிரை வசதி நிறுவப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு இந்த வசதியை நவம்பர் 1 ஆம் தேதி முறையாக கோயில் வளாகத்தில் தொடங்கி வைத்தார். மயிலாப்பபூர் எம்.எல்.., தா.வேலு மற்றும் துறை அலுவலர்கள் மற்றும் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி

 

 

Verified by ExactMetrics