மயிலாப்பூரில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் ஆஃப் தி குட் ஷெப்பர்ட் தேவாலயம், ஜூலை 7 ஞாயிற்றுக்கிழமை மிஷன் திருவிழாவைக் கொண்டாடியது.
இந்தியாவின் முதல் மிஷனரியாகக் கருதப்படும் மிஷனரி பர்தோலோமஸ் ஜீகன்பால்கின் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
தமிழ் நாட்டில் காலடி எடுத்து வைத்த பிறகு தமிழில் தேர்ச்சி பெற்ற அவர், புதிய ஏற்பாட்டை தமிழ் மொழியில் மொழிபெயர்த்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு அச்சகத்தை கொண்டு வந்த பெருமையும் இவரையே சாரும்.
செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்