தேர்தல் முடிவுகள் வந்து வெற்றி பெற்ற பிறகு மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு மூன்று திட்டங்களை வகுத்திருந்தார். அதில் முக்கியமான ஒன்று குடிசை மாற்று வாரிய கட்டிடங்கள் உள்ள பகுதிகளில் குப்பைகள் அதிகமாக தேங்கி இருப்பதை அகற்றுவது. மெரினா கடற்கரை அருகே உள்ள நொச்சி நகர் பகுதியில் இந்த பணிகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்தது. அடுத்தது மந்தைவெளி பகுதியில் உள்ள கபாலி தோட்டத்தில் இந்த பணிகள் நடைபெற உள்ளதாகவும், அதற்கு அடுத்தது பல்லக்குமாநகர் பகுதியில் இந்த பணிகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் எம்.எல்.ஏ தா. வேலு தெரிவித்துள்ளார்.
இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒவ்வொரு கட்டிடங்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் இந்த குப்பைகளை கொட்டியுள்ளனர். இந்த குப்பைகள் நாள் கணக்கில் அகற்ற படாமல் உள்ளது. மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குடிசைகள் உள்ள இடங்களிலும் இந்த பிரச்சனை உள்ளது. இதை பற்றி தெருக்களை சுத்தம் செய்யும் பணியாளர்களிடம் கேட்டபோது இதுபோன்ற இடங்களில் குப்பைகளை அகற்ற தேவையான வசதிகள் இல்லை என்று தெரிவிக்கின்றனர். இந்த குப்பைகளை அகற்றும் பணியை முழு வீச்சில் செய்யவிருப்பதாக எம்.எல்.ஏ தா. வேலு தெரிவித்தார்.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…