பருவமழைக்கு முன்னதாக, மழைநீர் வடிகால்களில் உள்ள சகதி மற்றும் வண்டல் மண்ணை அகற்றுவதற்காக, மாநகராட்சி பணியாளர்கள் மீண்டும் வந்துள்ளனர்.
ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆந்திர மகிள சபா மருத்துவமனை வளாகம், ஆர்.ஏ.புரத்தில் பொன் முத்துராமலிங்கம் சாலை மற்றும் பிற இடங்களில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
வண்டல் மண் கோணி பைகளில் அடைக்கப்பட்டு பின்னர் அகற்றப்பட்டு வருகிறது.
இப்பணி மழைநீர் சீராக செல்வதற்கும், உள்ளூர் பகுதியில் வெள்ளம் ஏற்படாமல் இருக்கவும் உதவும்.
உங்கள் பகுதியில் உள்ள வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக உணர்ந்தால், இப்போது மண்ணை அகற்ற வேண்டும் என்றால், 1913 என்ற எண்ணில் உங்கள் பிரச்சினையை கூறுங்கள். மேலும் தேவைகளுக்கு சென்னை மாநகராட்சி உதவி வாட்ஸ்ப் எண் – 9445551913.