மயிலாப்பூரிலிருந்து அடையாறு வழியாக தி.நகருக்கு மீண்டும் 5B பேருந்து இயக்கம்.

நீண்ட வருடங்களாக சென்னை மாநகர பேருந்து 5B வழித்தடம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை மயிலாப்பூர் எம்.எல்.ஏ த.வேலு இந்த பேருந்து வழிதடத்தில் பேருந்து இயக்கத்தை மீண்டும் தொடங்கி வைத்தார். மக்கள் நீண்ட நாட்களாக இந்த பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ தா வேலு சென்னை மாநகர பேருந்துகளை இயக்கும் நிர்வாகத்திடமும் மற்றும் துறை அமைச்சரிடமும் பேசி இந்த பேருந்தை மீண்டும் இயக்க ஏற்பாடு செய்துள்ளார். இந்த 5B வழித்தடம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திலிருந்து அடையாறு வழியாக தி.நகர் செல்லும்.

இந்த பேருந்து வழித்தடம் 1980 மற்றும் 90களில் மிகவும் பிரபலம் வாய்ந்த வழித்தடம். இந்த பேருந்து சேவை தொடங்கியதை பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளனர். பழைய காலங்களில் சென்னை ஐஐடி, தாம்பரம் செல்வதற்கும் மற்றும் தி.நகர் ஷாப்பிங் செல்வதற்கும் இந்த பேருந்தை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வந்ததாக தங்களுடைய நினைவுகளை மயிலாப்பூர் டைம்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மக்கள் இந்த பேருந்தை அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் விதமாக சாதாரண கட்டண பேருந்தாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago