மயிலாப்பூரிலிருந்து அடையாறு வழியாக தி.நகருக்கு மீண்டும் 5B பேருந்து இயக்கம்.

நீண்ட வருடங்களாக சென்னை மாநகர பேருந்து 5B வழித்தடம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை மயிலாப்பூர் எம்.எல்.ஏ த.வேலு இந்த பேருந்து வழிதடத்தில் பேருந்து இயக்கத்தை மீண்டும் தொடங்கி வைத்தார். மக்கள் நீண்ட நாட்களாக இந்த பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ தா வேலு சென்னை மாநகர பேருந்துகளை இயக்கும் நிர்வாகத்திடமும் மற்றும் துறை அமைச்சரிடமும் பேசி இந்த பேருந்தை மீண்டும் இயக்க ஏற்பாடு செய்துள்ளார். இந்த 5B வழித்தடம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திலிருந்து அடையாறு வழியாக தி.நகர் செல்லும்.

இந்த பேருந்து வழித்தடம் 1980 மற்றும் 90களில் மிகவும் பிரபலம் வாய்ந்த வழித்தடம். இந்த பேருந்து சேவை தொடங்கியதை பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளனர். பழைய காலங்களில் சென்னை ஐஐடி, தாம்பரம் செல்வதற்கும் மற்றும் தி.நகர் ஷாப்பிங் செல்வதற்கும் இந்த பேருந்தை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வந்ததாக தங்களுடைய நினைவுகளை மயிலாப்பூர் டைம்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மக்கள் இந்த பேருந்தை அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் விதமாக சாதாரண கட்டண பேருந்தாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Verified by ExactMetrics