சாந்தோம் பகுதியில் உள்ள பள்ளிகளில் கண்ணகி நகர் போன்ற பகுதிகளிலிருந்து வந்து படிக்கும் பள்ளி மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை .

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் பள்ளி மாணவர்களுக்காக ஒரு புதிய பேருந்து சேவையை தொடங்கியுள்ளனர். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு செம்மஞ்சேரி, கண்ணகி நகர் போன்ற பகுதிகளிலிருந்து தூரத்தில் இருந்து வரும் பள்ளி மாணவர்களுக்கு புதிய பேருந்து சேவையை தொடங்கியுள்ளனர். (ஏனென்றால் இந்த பகுதிகளில் தற்போது வசிக்கும் வரும் மக்கள் ஏற்கனெவே பட்டினப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தனர் இவர்களுக்கு அரசு நிரந்தர குடியிருப்புகள் செம்மஞ்சேரி, கண்ணகி நகர் போன்ற பகுதிகளில் ஏற்படுத்தி கொடுத்தனர். எனவே அவர்கள் வீட்டில் இந்த பகுதியில் பள்ளிகளில் படித்து வந்த மாணவர்கள் அதே பள்ளிகளில் மீண்டும் படிப்பை தொடர்கின்றனர்).

எடுத்துக்காட்டாக மாதா சர்ச் சாலையிலுள்ள செயின்ட் அந்தோணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் லாசரஸ் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக தினமும் ஸ்பெஷலாக மூன்று பேருந்து சேவைகளை இயக்குகின்றனர். இந்த பேருந்துகள் மூலம் கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி மாணவர்களை  ஏற்றிக்கொண்டு நேராக பள்ளி வாசலில் வந்து இறக்கி விடுகின்றனர். வேறெங்கும் இந்த பேருந்து இடையில் நிற்காது.

இது சம்பந்தமாக லாசரஸ் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது மாணவர்கள் நலன் கருதி தினமும் காலை, மாலை வேளைகளில் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துவரவும் மற்றும் மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்லவும் ஆசிரியர் ஒருவர் இந்த பேருந்தில் சென்று வருவதாக கூறுகிறார்.

Verified by ExactMetrics