மார்கழி மாதத்திற்காக மார்க்கெட் பகுதிகளில் கோல மாவுகள் விற்பனை.

மார்கழி மாதத்தில் மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் கோலங்களை போடுவார். இது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தற்போது மார்கழி மாதம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் சிலர் கோல மாவு மற்றும் கலர் பொடிகளை விற்று வருகின்றனர். இந்த படத்தில் உள்ள கோல மாவு விற்று வரும் பெண்ணிடம் ஒரு டசன் அளவுக்கு விதவிதமான கலர் கோல மாவுகள், பொடிகள் கிடைக்கிறது. 150 கிராம் பாக்கெட்டின் விலை ரூ.10.