ஆர்.ஏ.புரம் மாதா தேவாலயத்தில் இளைஞர்கள் குழுவின் சார்பாக நடைபெற்ற கிறிஸ்துமஸ் கரோல் போட்டி

லாசரஸ் சர்ச் சாலையில் உள்ள மாதா தேவாலயத்தில் இளைஞர்கள் குழுவின் சார்பில் கிறிஸ்துமஸ் விழாவிற்க்காக வருடா வருடம் கிறிஸ்துமஸ் கரோல் போட்டி நடைபெறும். கடந்த வருடம் கொரோனா காரணமாக நிகழ்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை. இந்த வருடம் அவர்களின் 25ஆவது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் ‘Chriscar’ என்ற பெயரில் கரோல் போட்டிகள் கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

இந்த போட்டிகளுக்காக விழா மேடைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பாதிரியார்கள் மற்றும் சகோதரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்ச்சியில் சுமார் ஐந்நூறு நபர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் அபிராமபுரம் செயின்ட் மேரிஸ் சாலையிலுள்ள மாதா சர்ச்சின் குழுவினர் முதல் இடத்தை பிடித்தனர்.