மெரினாவில் இரண்டு புதிய குடியிருப்புகள் பயனாளிகளிடம் ஒப்படைப்பு.

சாந்தோம் மெரினா கடற்கரை அருகே உள்ள டூமிங்குப்பத்தில் குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்டிருந்த கட்டிடங்களின் இரண்டு பிளாக்குகளை பயனாளிகளிடம் கடந்த வாரம் ஒப்படைத்தனர். இந்த வீடுகள் ஒப்படைக்கும் விழாவில் தமிழ்நாடு அமைச்சர் T. M. அன்பரசன் மற்றும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா. வேலு கலந்து கொண்டனர்.

கட்டிடங்களின் ஒவ்வொரு பிளாக்கிலும் 216 வீடுகள் உள்ளது. இங்கு ஏற்கனெவே இருந்த பழைய கட்டிடங்களில் வசித்து வந்த மக்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுனாமியின் போது வீடிழந்தவர்களுக்கும் இங்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு கட்டப்பட்டு வரும் வீடுகளை வேலைகள் முடிக்கப்பட்டு படிப்படியாக தகுதியுடையோருக்கு வழங்கப்படும் என்று எம்.எல்.ஏ தெரிவித்தார்.