இந்த குப்பம் பகுதியில் உள்ள 20 நபர்கள் ஆண்களும் பெண்களும் தமிழில் கையொப்பமிட்டு படிக்க முடியும் என்று பெருமிதம் கொள்கிறார்கள்

ஒரு பள்ளி ஆடிட்டோரியத்தில் கடந்த சனிக்கிழமை சுமார் இருபது பேர் கொண்ட அறுபது வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பட்டமளிப்பு விழா உடையணிந்து பட்டங்கள் பெற வந்திருந்தனர். செய்தி என்னவென்றால் கடந்த ஆறு முதல் எட்டு மாதங்களாக மெரினா குப்பம் ஓரமாக உள்ள முள்ளிமாநகரில் உள்ள மக்களுக்கு தமிழில் கையெழுத்து போடுவதற்கும், பத்திரிக்கைகள் வாசிப்பதற்கும், புத்தகங்கள் படிப்பதற்கும் தெரியாத மக்களுக்கு பயிற்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனமான டிகினிட்டி பவுண்டேசன் சென்னை சேப்டர் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மூத்த குடிமக்கள் பட்டங்கள் பெறுவதற்கு வந்திருந்தனர்.

இது தவிர தினமும் வாரத்தில் ஐந்து நாட்களுக்கு பாட்டு பாடுதல், கதை சொல்லுதல், நடனமாடுதல் போன்ற இதர பயிற்சிகளும் இங்குள்ள பெண்களுக்கு டிகினிட்டி பவுண்டேசன் சார்பாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்பில் இந்த வட்டாரத்திலிலுள்ள சுமார் எண்பது பெண்கள் கலந்து கொள்வதாக டிகினிட்டி பவுண்டேசன் தெரிவித்துள்ளது.

<< இது போன்று உங்கள் பகுதியில் தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவிகள் வழங்கப்பட்டு வந்தால் அவர்கள் பற்றிய விவரங்களை எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள் >>

Verified by ExactMetrics