மயிலாப்பூர் டைம்ஸ் கடந்த இருபது வருடங்களாக பள்ளிக்கூடங்களுக்கும் மற்றும் ஏழை கல்லூரியில் சேர்வதற்கும் மற்றும் இன்னும் பிற சமுதாய நலன்களை வழங்க மயிலாப்பூர் டைம்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறது. போன வருடம் கோவிட் நேரத்தில் பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது. அதே போல இந்த வருடமும் இரண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஒன்று சாந்தோம் பகுதியில் உள்ள குப்பங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் சில இடங்களில் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வேலை இல்லாமல் உள்ள தினக்கூலி வேலை செய்பவர்களுக்கும் உதவிகள் கோவிட் கேர் ஒப்பந்த பணியாளர்கள் மூலம் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறது.
மற்றொன்று ஆர்.ஏ.புரம் மண்டலத்தில் உள்ள கோவிட் கேர் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் காலையில் சூடான ஆவின் பால் வழங்கப்படுகிறது. ஏனென்றால் இவர்களின் வேலை நேரம் காலை ஏழு மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணிக்கு முடிவடைகிறது. நிறைய பணியாளர்கள் காலையில் உணவு ஏதும் சாப்பிடாமலேயே வேலைக்கு வந்து விடுகின்றனர்.
இந்த இரண்டு சேவைகளுக்கும் நன்கொடைகள் தேவைப்படுகிறது. பொதுமக்கள் தங்களால் இயன்ற நன்கொடைகளை அளிக்கலாம். நன்கொடைகள் அளிப்பவர்கள், நன்கொடை பற்றிய விவரங்களை mytimesedit@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். வங்கி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Acc No: 420948275
Bank: இந்தியன் வங்கி
Branch: அபிராமபுரம்
IFSC CODE: IDIB000A092
மயிலாப்பூரில் நவம்பர் 20ம் தேதி காலையில் ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கான முதல் சடங்கு தொடங்கியது. தெருக்கள்…
சென்னை மாநகராட்சி மெரினா லூப் சாலையின் தெற்குப் பகுதியில் மீன் சந்தை மற்றும் உணவு விடுதிக்கான திட்டங்களைக் கொண்டுள்ளது. இத்திட்டம்…
ஆழ்வார்பேட்டை முர்ரேஸ் கேட் சாலையில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் திங்கள்கிழமை மாதிரி…
சித்திரகுளம் வடக்கு வீதி இப்போது சுத்தமாக காட்சியளிக்கிறது. சென்னை மாநகராட்சி உள்ளூர் பொறியாளர் தலைமையில் துப்புரவுப் பணி நடந்தது. இது…
ஆர் ஏ புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபா வளாகத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் இலவச பல் பரிசோதனை…
மயிலாப்பூர் மண்டலத்தில் மழை பெய்யும் போது நின்று உற்று நோக்கும் நல்ல இடங்களில் ஒன்று இப்பகுதியில் உள்ள கோவில் குளங்கள்.…