மயிலாப்பூரில் செப்டம்பர் 16 அதிகாலையில் கணிசமான அளவு மழை இடி மின்னலுடன் பெய்தது.
இதன் காரணமாக சில வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டு சாதனங்கள் சில பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிகின்றனர்; குளிர்சாதன பெட்டிகள் போன்றவை.
டி’சில்வா சாலையைச் சேர்ந்த வெங்கடேஷ் ராமகிருஷ்ணன், சில சாதனங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை கணக்கெடுத்து வருவதாகக் கூறினார்.
அனைத்து உயரமான கட்டிடங்களிலும் இடி தாங்கி இருப்பது முக்கியம் என்று ஒரு நிபுணர் கூறுகிறார்; சில கட்டுமான நிறுவனங்கள் இதை அமைப்பதில்ல என்றும் ஒரு இடி தாங்கி அமைக்க சுமார் ரூ.40,000வரை செலவாகும் என்றும், அதை அமைக்க திறமையான ஒருவர் தேவை என்றும் அவர் கூறினார்.