மயிலாப்பூர் கோவில்களின் ஸ்ரீபாதம் ‘மேஸ்திரி’அறநிலையத்துறை அமைச்சரை சந்தித்து கோவில் திறப்பது சம்பந்தமாக தங்கள் வேண்டுகோளை முன்வைக்க முடிவு

கே.சங்கரை மயிலாப்பூரின் ஸ்ரீபாதம் உறுப்பினர்கள் ‘மேஸ்திரி’ என்று குறிப்பிடுகின்றனர். இவர் ஸ்ரீபாதம் உறுப்பினர்களின் தலைவராக இருக்கிறார், மயிலாப்பூரில் உள்ள பல கோவில்களில் ஊர்வலங்கள் நடத்துவதை தொகுத்து வழங்குகிறார்.

இவர் கடந்த 25 ஆண்டுகளாக மயிலாப்பூர் கோயில்களில் ஸ்ரீபாதமாக பணியாற்றி வருகிறார். இவரது முன்னோர்களும் பல தலைமுறைகளாக மயிலாப்பூர் கோவில்களில் உள்ள கடவுள்களை தங்கள் தோள்களில் சுமந்து இந்த சேவையை செய்து வந்தவர்கள். பெரிய உற்சவங்களின் போது மயிலாப்பூர் கோயில்களில் ‘பந்தல்’ ஏற்பாடு செய்கிறார்.

கபாலீஸ்வரர் கோயில், மாதவ பெருமாள் கோயில், கேசவ பெருமாள் கோயில், மாரி செட்டி வெங்கடேச பெருமாள் கோயில் மற்றும் காரணீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் 60 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஸ்ரீபாதமாக சேவை செய்கிறது.

தற்போதைய ஊரடங்கின் போது கபாலீஸ்வரர் கோயில் மட்டுமே கோவில் வளாகத்திற்குள்ளேயே ஊர்வலங்களை ஏற்பாடு செய்து வருவதாகவும், இந்த சேவையைச் செய்யும் மற்ற எல்லா கோவில்களும் வளாகத்திற்குள்ளேயே நடைபெறும் உற்சவத்தை கூட நிறுத்திவிட்டதாகவும் சங்கர் இன்று காலை மயிலாப்பூர் டைம்ஸிடம் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஏப்ரல் 10 முதல் தெருவில் வீதி உலா வரும் அனைத்து ஊர்வலங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.

அனைத்து கோயில்களிலும் இருக்கும் ஸ்ரீபாதம் உறுப்பினர்களின் தற்போதைய பிரச்சனைகளை மாநில அறநிலையத்துறை அமைச்சரை சந்தித்து தெரிவிக்க சங்கர் திட்டமிட்டுள்ளார்.

ஊர்வலங்கள் மீதான கட்டுப்பாடுகளின் விளைவாக ஸ்ரீபாதம் உறுப்பினர்களின் தற்போதைய அவலநிலையை போக்க சில தளர்வுகளை அறிவிக்க வேண்டி வரும் புதன் கிழமை அமைச்சரை சந்திக்க உள்ளதாக மேஸ்திரி தெரிவிக்கிறார். கோவிலுக்குள் சாமி ஊர்வலங்களை நடத்த அனுமதி தரவேண்டும் என்றும் அதே நேரத்தில் குறைந்த அளவிலான பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்றும், இதனால் எங்கள் சேவைகளுக்காக சில நிதியை பெறுவோம் என்றும், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சாமி ஊர்வலங்கள் நிறுத்தப்பட்டதால் எங்களது பெரும்பான்மையான உறுப்பினர்கள் கடுமையான நிதி சவால்களை எதிர்கொள்கின்றனர் என்றும். பல குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இதை நம்பியுள்ளதாக ஸ்ரீபாதம் குழுவின் மேஸ்திரி தெரிவிக்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், இது நிதி அவலநிலை மட்டுமல்ல, “நீங்கள் இந்த சேவையைச் செய்யும்போது, உங்களுக்கு நிறைய மன திருப்தி கிடைக்கும்.

அடுத்த வாரம் முதல் பக்தர்களுக்காக கோயில்கள் திறக்கப்படுவதற்கும், ஊர்வலங்களை அனைத்து விதிமுறைகளை பின்பற்றி நடத்துவது சம்பந்தமான வேண்டுகோளையும் முன்வைப்பேன் என்று அவர் கூறுகிறார். “இது ஸ்ரீபாதம் குழுவினருக்கு மட்டுமல்ல, பல சேவை வழங்குபவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கோயில்களை நம்பியிருக்கிறார்கள்.”

ஏப்ரல் கடைசி வாரத்திலிருந்து கோயில்களுக்கு பக்தர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீபாதம் மட்டுமல்ல, மலர் விற்பனையாளர்கள் மற்றும் பூஜா பொருட்கள் சில்லறை விற்பனையாளர்கள் போன்ற அனைத்து சேவை வழங்குநர்களுக்கும் இது ஒரு கடினமான நேரமாகும். இது சம்பந்தமாக சாதகமான நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க அமைச்சரின் கவனத்திற்கு இதை நாங்கள் கொண்டு வர விரும்புகிறோம்.

செய்தி மற்றும் படங்கள் : பிரபு

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

2 days ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

3 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

4 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

6 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

1 week ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago