Categories: சமூகம்

மயிலாப்பூர் டைம்ஸ் சாரிடபிள் டிரஸ்ட், கோவிட் கேர் தொழிலாளர்கள் மற்றும் கோவிட் -19 தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

மயிலாப்பூர் டைம்ஸுக்கு கடந்த பத்து நாட்களாக பெரும்பாலான இடங்களில் மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறது என்ற செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்த செய்திகள் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் கோவிட் கேர் பணியாளர்கள் மூலம் வந்தது. இவர்கள் தினமும் கோவிட் சம்பந்தமான வேலைகளை செய்வதற்கு அனைத்து பகுதிகளுக்கும் செல்வர். உதவிகள் சில இடங்களில் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் சில இடங்களில் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வேலை இல்லாமல் உள்ள தினக்கூலி வேலை செய்பவர்களுக்கும் உதவிகள் தேவைப்படுவதாக தெரிவிக்கின்றனர்.  மயிலாப்பூர் டைம்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் வழியாக இவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்யப்பட்டு பொதுமக்களிடம் நன்கொடைகள் பெறப்பட்டுவருகிறது. ஏற்கனெவே பட்டினப்பாக்கம் பகுதியில் கோவிட் கேர் பணியாளர்கள் மூலம் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவற்றை மூன்று குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்று கோவிட் கேர் பணியாளர்களின் வேலை நேரம் காலை ஏழு மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணிக்கு முடிவடைகிறது. நிறைய பணியாளர்கள் காலையில் உணவு ஏதும் சாப்பிடாமலேயே வேலைக்கு வந்து விடுகின்றனர். வெளியில் சாப்பிடுவதற்கும் கடைகள் ஏதும் இல்லை. கடந்த வருடம் மாநகராட்சி காலை சிற்றுண்டி மற்றும் தேநீர் வழங்கியதாகவும் ஆனால் தற்போது புதிய ஒப்பந்தத்தில் பட்ஜெட் பற்றாக்குறையால் இவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கோவிட் கேர் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆர்.ஏ புரம், எம்.ஆர்.சி. நகர், கே.வி.பி கார்டன் போன்ற பகுதிகளில் சுமார் 112 ஒப்பந்த பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் காமராஜ் சாலை பூங்காவில் தினமும் ஒன்று கூடுகின்றனர். இவர்களுக்கு மயிலாப்பூர் டைம்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் ஒருநாள் விட்டு ஒருநாள் காலையில் சூடான ஆவின் பால் வழங்க முடிவு செய்யப்பட்டு நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இரண்டு சேவைகளுக்கும் நன்கொடைகள் தேவைப்படுகிறது. பொதுமக்கள் தங்களால் இயன்ற நன்கொடைகளை அளிக்கலாம். நன்கொடைகள் அளிப்பவர்கள், நன்கொடை பற்றிய விவரங்களை mytimesedit@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். வங்கி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Acc No: 420948275
Bank: இந்தியன் வங்கி
Branch: அபிராமபுரம்
IFSC CODE: IDIB000A092

 

admin

Recent Posts

மயிலாப்பூரில் ஜூனியர்களுக்கான செஸ் போட்டி

64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…

9 hours ago

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் பழுதுபார்ப்புக்காக மூடப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…

9 hours ago

ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டோ உதிரிபாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல்.

மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…

9 hours ago

வில்லிவாக்கத்தில் குடும்பத்தினருடன் ‘காணாமல் போன நபர்’ மீண்டும் இணைந்தார்.

மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…

1 day ago

மயிலாப்பூர் ஆன்லைன் சமூகக் குழுக்களில் பகிரப்பட்ட ‘நபர் காணவில்லை’ என்ற செய்தி.

இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…

1 day ago

தொல்காப்பிய பூங்காவில், பணிகள் இன்னும் நடந்து வருவதால் விடுமுறை நாட்களில் வரும் கூட்டத்தை இழந்துள்ளது.

மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…

2 days ago